குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகால் மூடல்: 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகால் மூடல்: 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

குரோம்பேட்டை போத்தீஸ் ஸ்வர்ணமகாலில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடை மூடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனடிப்படையில் குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ணமகாலில் 240 ஊழியர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் கடை மூடப்பட்டது. சுகாதார துறை சார்பில் கடை முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் சுகாதாரத்துரை அதிகாரிகள் கிருமி நாசினி தெளித்து சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs