தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

தாம்பரம் நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா நோய் தொற்று 3வது அலை பரவலைக் தடுக்கும் விதமாக சானிடோரியம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தாம்பரம் நகராட்சி ஆணையர் லட்சுமணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் பொதுமக்களிடம் அடிக்கடி கை கழுவும் பழக்கம் ஏற்படுத்துதல், சமூக இடைவெளி, முககவசம் அணிவததின் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழஙகினர்.

அதேபோல் பேருந்து மற்றும் ஆட்டோககளில் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார அலுவலர் முகைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!