தியாகி சங்கரய்யாவின் 100வது பிறந்தாள், முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் வாழ்த்து

தியாகி சங்கரய்யாவின் 100வது பிறந்தாள், முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் வாழ்த்து
X

தியாகி சங்கரய்யாவின் 100வது பிறந்த நாளையொட்டி திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தியாகி சங்கரய்யாவின் 100வது பிறந்தாளை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

தியாகி சங்கரய்யாவின் 100வது பிறந்தாளை முன்னிட்டு, குரோம்பேட்டையில் உள்ள அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ,உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ,திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ,திமுக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் ,இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகன்னு ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்க்கு முன்னதாக குரோம்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் பல்லாவரம் நகராட்சியில் தியாகி சங்கரையாவின் நினைவு கல்வெட்டுக்கு திறக்கபட்டு அவரின் இல்லம் எதிரே மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியினை அக்கட்சியின் மாநில பொது செயலாளர் பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!