தாம்பரம் மாநகராட்சிக்கு மெட்ரோ ரெயில் விரிவுபடுத்தும் பணி துவக்கம்: மேயர் வசந்தகுமாரி
பெருங்களத்தூரில் உள்ள தனியார் அரங்கில் பீர்க்கன்காரணை- பெருங்களத்தூர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோருக்கு பாராட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் குடியிருப்போர் நல சங்க தலைவர் மகேந்திரபூபதி, மற்றும் சக்தி நாராயணன் ஆகியோர் மேயர் துணை மேயருக்கு பூங்கொத்து, சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர். இதில் கலந்து கொண்டு பேசிய தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கூறும்போது, பெருங்களத்தூர் மேம்பால பணிகளை அரசு எவ்வளவு விரைவாக விரைந்து முடிக்க முடியுமோ அந்தளவிற்கு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் தற்போது சென்னை விமான நிலையம் வரை உள்ள மெட்ரோ ரெயில் தாம்பரம் மாநகராட்சிக்கும் விரிவுபடுத்தும் விதமாக தற்போது முதற்கட்ட பணிகள் தொடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தாம்பரம் மாநகராட்சி வரும் காலத்தில் வெள்ள நீர் சூழ்ந்து விடாத அளவிற்கு மழைநீர் வடிக்கால் அமைத்து கொடுக்கப்படும் எனவும் மேயர் வசந்தகுமாரி உறுதி அளித்தார். இறுதியாக நலச்சஙகத்தினர் காவல்துறைக்கு சிசிடிவி கேமராக்களை வழஙகினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu