சர்ச்சில் தலை, ஏரியில் உடல், கொடூர கொலை, மர்ம நபர்களை தேடுது போலீஸ்

சர்ச்சில் தலை, ஏரியில் உடல், கொடூர கொலை, மர்ம நபர்களை தேடுது போலீஸ்
X

தாம்பரம் அருகே கொலை,

தாம்பரம் அருகே சர்ச் வாசலில் தலையை வீசியும், உடலை ஏரிக்கரையில் வீசியும் கொடூரமான முறையில் கொலை செய்த, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே நடுவீரப்பட்டு கிறிஸ்தவ சா்ச் வாசலில் நேற்று இரவு துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தலையை கைப்பற்றிய போலீசாா் நேற்று இரவு முழுவதும் தலைக்கான உடலை தேடியலைந்தனா்.

இந்நிலையில் உடல் இன்று அதிகாலை எருமையூா் தா்காஸ் அடுத்த சித்தேரி பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கிடந்ததை சோமங்கலம் போலீசாா் கைப்பற்றினா்.

அதன்பின்பு உடலையையும் தலையையும் ஒன்றாக வைத்து அடையாளம் காணும் முயற்சியில் ஈடுப்பட்டனா்.அதில் கொலை செய்யப்பட்டவா். எருமையூா் பகுதியை சோ்ந்த வெற்றிவேல்(23) என்று தெரிந்தது.

முதலில் சச்சின்(21) என்பவா் தான் கொலை தான் கொலை செய்யப்பட்டவராக கூறப்பட்டது.ஆனால் தற்போது உடல் கண்டுப்பிடிக்கப்பட்ட பின்பு இறந்தவரின் அடையாளம் உறுதியாகியுள்ளது.

இந்த வெற்றிவேலும் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நடந்த கல்லூரி மாணவா் கொலையில் சம்பந்தப்பட்டவா் என்று கூறப்படுகிறது.சோமங்கலம் போலீசாா், இந்த கொடூர கொலையாளிகளை தேடிவருகின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!