கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
X
கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில், நூற்றுகணக்கானோர் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் கேம்ப் ரோட்டில் மகிமையுள்ள சீயோன் கிறிஸ்தவசபை சார்பில் நடைபெற்ற சிறப்பு ஆதாரனையில் நூற்றுக்ணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இயேசு பிறப்பு செய்திகள் பற்றி மக்களுக்கு சியோன் கிறிஸ்தவ சபையின் பாஸ்டர் சாலமன் ராஜா எடுத்துரைத்தார். கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்பட்டு முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஏசு, கிறிஸ்துவின் பாடல்களை ஆர்வத்துடன் பெண்கள் பாடினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!