நெடுங்குன்றம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

நெடுங்குன்றம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
X

நெடுங்குன்றம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. 

பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் சேர்மன் டாக்டர் தேவராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பாஸ்டர் ஜான் பால் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டு ஆடல், பாடல், கிறிஸ்து பிறப்பு நாடகம் என தங்களின் தனி திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அன்னை வேளாண்கண்ணி குழும செயலாளர் டாக்டர் தேவ் ஆனந்த் கூறுகையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா கோரப்பிடியில் இருந்த நிலையில் இந்த ஆண்டு முதல் சிறப்பாக கிறிஸ்துமஸ் விழா, புத்தாண்டு எல்லாருடைய வாழ்விலும் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுகொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!