அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
X

அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழா

அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் மாணவர்கள் சார்பாக கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றம் அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் சேர்மன் டாக்டர் தேவராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பாஸ்டர் ஐசக் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டு ஆடல், பாடல், கிறிஸ்து பிறப்பு நாடகம் என தங்களின் தனி திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அன்னை வேளாண்கண்ணி குழும செயலாளர் டாக்டர் தேவ் ஆனந்த் கூறுகையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா கோரப்பிடியில் இருந்த நிலையில் இந்த ஆண்டு முதல் சிறப்பாக கிறிஸ்துமஸ் விழா, புத்தாண்டு எல்லாருடைய வாழ்விலும் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுகொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important in business