முதல்வர் மூன்று முறை வந்து பார்த்தும் அரசு அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை

முதல்வர் மூன்று முறை வந்து பார்த்தும் அரசு அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை
X

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த முடிச்சூர் கிராமத்தில் நடைபெற்ற  கிராம சபை கூட்டத்தில் பேசிய திமுக எம்பி டி.ஆர். பாலு 

முதல்வர் மூன்று முறை வந்து பார்த்தும் அரசு அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என டி.ஆர்.பாலு கிராம சபை கூட்டத்தில் புகார்

முதல்வர் மூன்று முறை வந்து பார்த்தும் அரசு அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என கிராம சபை கூட்டத்தில் டி.ஆர்.பாலு காட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த முடிச்சூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சிந்துலேகா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா பொது மக்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். குப்பைகள் சரிவர அப்புறப்படுவதில்லை, போதிய குப்பை தொட்டிகள் இல்லை, மேலும் கடந்த 8 மாதங்களாக மின்மாற்றியில் ஆயில் வடிவதாகவும் அது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அடிக்கடி வீட்டில் மின் சாதன பொருட்கள் பழுதாகி விடுவதாக குற்றம்சாட்டினர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் சிந்துலேகா, நாடாளுமன்ற உறுப்பினரிடம் சீக்கனா ஏரியில் நடைபாதை ஏற்படுத்தி தருமாறு கோரfக்கை வைத்தார்.

இறுதியாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, முடிச்சூரில் மழை நீர் தேங்குவதை கட்டுப்படுத்துங்க கிட்டதட்ட 50 ஆண்டு காலமாக நாங்களும் சொல்லிக்கிட்டே இருக்கோம் ஆட்சியாளர்கள் செய்யுறது இல்லை எந்த ஆட்சி வந்தாலும் மழை நீர் தேங்குவதற்கு தீர்வே காணவில்லை, இப்போ இந்த ஆட்சியிலாவது செய்யனும் அப்படின்னு தலைவர் மூன்று முறை வந்து பார்த்தும் கூட அரசு அதிகாரிகள் சரியா செயல்படவில்லை, நிதி வேண்டும் என்றால் கேளுங்கள், அதிகாரிகள் கேட்பதற்கு பயபடுகிறீர்களா என்ன என்று பேசினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்