செங்கல்பட்டு மாவட்டம் : மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் : மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக பெய்து வருகிறது.இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையினால் பல்வேறு பகுதிகளிலும்,குடியிருப்புகளிலும்,வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாகச் சென்று பார்வையிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினாா்.அதனைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிவாரண முகாம்களையும் நேரடியாக ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் ஊராட்சி, அமுதம் நகரில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

மேலும் தாம்பரம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இரும்புலியூர் வாணியன்குளம் பகுதியில் மழை நீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது செங்கல்பட்டு மாவட்ட பருவமழை சிறப்பு அதிகாரி அமுதா ஐஏஎஸ், அமைச்சர் தா.மோ. அன்பரசன்,சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?