ஒமைக்ரான் கட்டுப்படுத்த முதல்வர் தலைமையில் வல்லுநர் குழு ஆலோசனை: மா.சுப்பிரமணியன்
தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில், நுரையீரல் மறுவாழ்வு மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார்.
தமிழகத்தில் ஒமைக்ரான் கட்டுப்படுத்த முதல்வர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு கலந்தாலோசித்து இன்று மாலை முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சற்றே குறைப்போம், உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் மற்றும் உபயோகித்த எண்ணெய்யின் மறுபயன்பாட்டுத் திட்டங்கள் துவக்க விழா மற்றும் நுரையீரல் மறுவாழ்வு மையம் தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரையீரல் மறு வாழ்வு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொண்டார். 49,455, லிட்டர் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சேகரிப்பட்டு பயோடீசலாக மாற்றப்படுவதாக கூறினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கூறுகையில் தமிழகத்தில் ஒமைக்ரான் கட்டுப்படுத்த முதல்வர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு கலந்தாலோசித்து இன்று மாலை முடிவு அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் 25 பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு உள்ளது. நேற்றுவரை ஒமைக்ரான் 34 பேருக்கு உறுதி செய்யபப்ட்டது. 3 பேர் குண்மாகி வீடு திரும்பினர். மொத்தம் 65 பேருக்கு சோதனை முடிவுகள் வந்த நிலையில் கண்டறியப்பட்டது.
இன்று 5 பேர் வரை வீடு திரும்ப உள்ளதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu