உள்ளாட்சி அமைப்புகளை முடக்கியது அதிமுக அரசு: ப. சிதம்பரம்

உள்ளாட்சி அமைப்புகளை முடக்கியது அதிமுக அரசு: ப. சிதம்பரம்
X
5 ஆண்டுகள் உள்ளாட்சி அமைப்புகளை அதிமுக அரசு முடக்கியது என, குரோம்பேட்டையில் ப.சிதம்பரம் பேசினார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி திமுக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் ஆகிய இடங்களில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு பிரச்சார கூட்டத்தில் பேசினார்

அவர் கூறியதாவது: 5 ஆண்டுகள் உள்ளாட்சி அமைப்புகளை அதிமுக அரசு முடக்கியது. ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் முறையாக தெரிவித்தது. அதனை தொடர்ந்து அரசு அமைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் அறிவித்து அதனை எதிர்கொள்கிறது. அதுபோல் சென்னைக்கு நிகராக வளர்ந்துள்ள இந்த பகுதியை தாம்பரம் மாநகராட்சி அமைக்கப்படும் என அறிவித்து, அந்த கனவு நினைவாகிறது. திமுக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையான நிதி, அதிகாரம், அதிகாரிகள் வழங்கி சிறப்பாக செயல்படுத்தும் என வாக்குறுதி அளித்துள்ளதற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன்.

அதுபோல், தற்போது மகளிர் முக்கியதுவம் அளித்து, பாதிக்கு பாதி மகளிர்கள் போட்டியிடுகிறார்கள். அதுபோல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என சிறப்பாக செயல்படும் திமுக கூட்டணி கட்சியினரின் மதசார்பற்ற வேட்பாளர்களை மக்கள் ஆதரித்து மாமன்ற உறுப்பினர்களாக தேர்தெடுக்க வேண்டும் என்றார். இந்த பிரசார கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உரையாற்றினார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்