சென்னை திமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்பில்லாத நபர் கோர்ட்டில் சரண்

சென்னை திமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்பில்லாத நபர் கோர்ட்டில் சரண்
X

சென்னை மடிப்பாக்கம் திமுக பிரமுகர் செல்வம் கொலை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த சதீஷ்

சென்னை மடிப்பாக்கம் திமுக பிரமுகர் செல்வம் கொலை வழக்கில் தொடர்பில்லாத நபர் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது

சென்னை மடிப்பாக்கம் 188வது வார்டு வட்ட செயலாளரும், திமுக பிரமுகருமான மடிப்பாக்கம் செல்வம் கடந்த பிப்.1ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கிஷோர், விக்னேஷ், சஞ்சய், விக்னேஷ், புவனேஸ்வர் உள்ளிட்ட 5 பேரை விக்கிரவாண்டியில் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்திருந்தனர். பின்னர் அருண் என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன் பிறகு இன்று வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ் என்பவர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இவர் இவ்வழக்கில் தொடர்புடைய முருகேசன் என்பவனின் கூட்டாளி என கூறப்படுகிறது. சரணடைந்த நபர் குறித்து மடிப்பாக்கம் போலீசாருக்கு தெரியபடுத்தியபோது போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தேடப்படும் சதீஷ், இவர் இல்லை என்றும், அவர் சண்டே சதீஷ் என கூறியதன் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார்.

தலைமறைவாக உள்ள கூலிப்படை தலைவன் முருகேசனை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர். இவரை பிடித்தால்தான் கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். சரணடைந்த சதீஷிடம் மடிப்பாக்கம் போலீசார் விசாரித்தும் வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!