செங்கல்பட்டு- தாம்பரம் ரயில்பாதை பணி எப்போது முடியும் ?
செங்கல்பட்டு- தாம்பரம் இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணியை அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு- தாம்பரம் இடையே 29 கி.மீ. தொலைவுக்கு 3-ஆவது பாதை அமைக்க கடந்த 2016-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இதற்கான மொத்த திட்ட மதிப்பு ரூ.256 கோடியாகும். இதில் இறுதிக்கட்டமாக, கூடுவாஞ்சேரி- தாம்பரம் வரை பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக, சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு அதிக ரயில்களை இயக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் தென்மாவட்டங்களில் இருந்து எழும்பூர் நோக்கி வரும் ரயில்களின் நிறுத்தப்படும் நேரத்தை குறைக்கும் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu