தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை

தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை
X

திருடு நடந்த வீடு. 

தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கம் பேராசிரியர் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம், இவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி. இவர் இன்று பிற்பகலில் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் புதியதாக வாங்கி வைத்திருந்த 12,சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது, உடனே இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் பீர்கண்காரனை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் சென்று ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருங்களத்தூர் பகுதியில் சமீப நாட்களாக தொடர்ந்து பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையர்களின் கைவரிசை காட்டி வருவதனால் பொது மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டு வருகிறது, இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!