தாம்பரத்தில் காய்கறி, பூ, பழக்கடைகள் மூடல்

தாம்பரத்தில் காய்கறி, பூ, பழக்கடைகள் மூடல்
X

தாம்பரத்தில் காய்கறி, பூ, பழக்கடைகள் மூடப்பட்டது. நாளை (திங்கட்கிழமை) மாற்று இடம் வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 2ம் கட்ட கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பல்வேறு கட்டுபாடுகளை தமிழகஅரசு விதித்துள்ளது. இந்நிலையில் தாம்பரம் நகராட்சி சார்பில் தாம்பரம் மார்க்கெட் பகுதிகளில் நடைபாதை கடைகள், காய்கறி, பூ, மீன் மாக்கெட் ஆகிய கடைகள் மூடப்பட வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது.இந்த அறிவிப்புக்கு அனைத்து வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது முற்றுகையிட்ட வியாபாரிகளிடம், போலீசார் மற்றும் நகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகமாக கூட்டம் கூடும் காய்கறி கடைகள், மீன் கடைகள், பூ, பழக்கடைகள் ஆகிய கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி தரப்படும். அதுவரை கடைகள் திறக்க அனுமதிக்கபடமாட்டாது. அந்த கடைகள் தவிர மற்ற கடைகளும், நடைபாதை வியாபாரிகளும் கடைகளை திறந்து கொள்ளலாம் என ஆணையர் சித்ரா தெரிவித்தார்.மேலும் காய்கறி, பழம், பூக்கடைகளை தள்ளுவண்டியில் நடமாடும் கடையாக விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இதனை ஏற்று கொண்ட வியாபாரிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil