செங்கல்பட்டு: கடத்திவரப்பட்ட 750 கிலோ குட்கா-100 மதுபாட்டில் பறிமுதல்!

செங்கல்பட்டு: கடத்திவரப்பட்ட 750 கிலோ குட்கா-100 மதுபாட்டில் பறிமுதல்!
X

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, மதுபானங்கள்.

ஓசூரில் இருந்து கடத்தி வந்த 750 கிலோ குட்கா மற்றும் 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த திருநீர்மலை சர்வீஸ் சாலையில் மினிவேனில் போதை பொருளான குட்கா கடத்தப்படுவதாக பம்மல் சக்கர்நகர் காவல்துறையினருக்கு ரகசிய தகல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் திருநீர்மலை சர்வீஸ் சாலையில் வந்து கொண்டு இருந்த மினி வேனை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது அந்த மினிவேனில் மறைத்து வைத்து இருந்த 750 கிலோ குட்கா மற்றும் 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து அனகாபுத்தூர் காமராஜபுரத்தை சேர்ந்த அருட்செல்வம், அவர்களது கூட்டாளியான சுரேஷ், ராஜேஷ், பிரசாத் மற்றும் முன்று ஓட்டுநர்களை கைது செய்தனர்.

இவர்கள் ஓசூரிலிருந்து கடத்தி வரப்பட்ட குட்காவை வண்டலூர் குடோனில் வைத்து வினியோகம் செய்து வருவதாகவும் கடைசியாக குட்காவை குடோனில் இறக்கி வைத்து விட்டு திருநீர்மலை சர்வீஸ்சாலையில் வரும்போது பிடிபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இது குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

#Chengalpattu, #Seized, #750kgsmuggledGutka,#100liquorbottle,#செங்கல்பட்டு, #கடத்திவரப்பட்ட, #750கிலோ, #குட்கா, #100மதுபாட்டில், #பறிமுதல், #gutka, #liquor, #மது, #கைது, #arrested, #smuggling, #Instanews, #tamilnadu

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!