பெண்ணிடம் கத்தி முனையில் 8 1/2 சவரன் செயின் பறிப்பு: கீழே விழுந்து தலையில் காயம்

பெண்ணிடம் கத்தி முனையில் 8 1/2 சவரன் செயின் பறிப்பு: கீழே விழுந்து தலையில் காயம்
X
தாம்பரத்தில், நடந்து சென்ற பெண்ணிடம், கத்தியை காட்டி மிரட்டி 8 1/2 சவரன் தங்க நகை பறித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர், விஜயலட்சுமி நகர், லட்சுமி நகர் பகுதியில், சிவகாமி(52), என்ற பெண்மணி, தனது பேத்தியை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்துக் கொண்டு, நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, சம்பவ இடத்தில் அடையாளம் தெதியாத மர்ம நபர், சிவகாமியை கீழே தள்ளிவிட்டு, கத்தியை காட்டி மிரட்டி, அவரது அணிந்திருந்த 8 1/2 சவரன் தாலிச்சங்கிலியை அறுத்துக் கொண்டும் இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு நபரிடன் உதவியுடன் தப்பிச் சென்றார்.

செயின் பறிப்பின்போது, கீழே விழுந்ததில் சிவகாமிக்கு தலையின் பின்புறம் காயமேற்பட்டு, 7 தையல் போடப்பட்டது. பின்னர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!