திருநீர்மலை பகுதியில் மாடு திருட்டு, வாலிபர் கைது செய்து

திருநீர்மலை பகுதியில் மாடு திருட்டு,  வாலிபர் கைது செய்து
X

பம்பல் சங்கர் நகர் காவல் நிலையம் (பைல் படம்)

திருநீர்மலை பகுதியில் மாட்டு இறைச்சிக்காக மாடு திருடிய நபர், போலிசாரால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த திருநீர்மலை வேம்புலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாம். இதே பகுதியில் இவரது தந்தை மாட்டு இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ராகுல் என்பவரது மாடு காணவில்லை என தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது இரவு 11 மணி அளவில் சாம் என்பவர் மாட்டை கட்டி இழுத்து செல்வதை பார்த்த ராகுல் அவரை பின் தொடர்ந்து துரத்தியுள்ளார். இதனால் ஆள் வருவதை கண்ட சாம் மாட்டை விட்டு ஓட்டம் பிடித்து தப்பி சென்றார்.

இது குறித்து பம்மல் சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் அடிப்படையில் மாடு திருட்டில் ஈடுபட்ட சாம் என்பவரை பிடித்து விசாரனை மேற்கொண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்