தாம்பரம் அருகே சகோதரிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த சகோதரர் : தொப்புள் கொடி அறுக்கும்போது இறந்த குழந்தை

தாம்பரம் அருகே சகோதரிக்கு வீட்டில்  பிரசவம் பார்த்த சகோதரர் : தொப்புள்  கொடி அறுக்கும்போது  இறந்த குழந்தை
X
தாம்பரம் அருகே சகோதரிக்கு வீட்டிலேயே சகோதரர் பிரசவம் பார்த்தபோது தொப்புள் கொடி அறுத்த குழந்தை இறந்து போனது.

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் அடுத்த திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மோனிஷா (20). இவருடைய காதலன் ஒரு வருடத்திற்கு முன்னர் ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், தனது சகோதரர் சிபி உடன் தங்கி வந்துள்ளார். நிறை மாத கர்ப்பிணியான மோனிஷாவிற்க்கு இன்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. .இதனால் செய்வது அறியாத சகோதரர் சிபி வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்..இதில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பின்னர் தொப்புள் கொடியினை அறுத்ததில் குழந்தை இறந்துள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் அதிக ரத்த போக்கு காரணமாக மயக்க நிலையில் இருந்த மோனிசாவை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த சேலையூர் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!