பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை: போலீசார் விசாரணை
X

காெள்ளையர்களால் பீராே உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடக்கின்றன.

பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து திருமணத்திற்காக வைக்கபட்டிருந்த 35 சவரன் தங்கநகைகள், ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை.

செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூரில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து திருமணத்திற்காக வைக்கபட்டிருந்த 35 சவரன் தங்கநகைகள், ரூ.20 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர்கள், ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை வீட்டில் அமா்ந்து சாப்பிட்டுவிட்டு, சாவகசமாக இரண்டாவது முறையாக கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

தாம்பரம் அருகே முடிச்சூா் சரவணபவன் நகரில் வசிப்பவா் உமா (35).இவரின் பெற்றோர் இறந்துவிட்டதால் தனது மாமா வீட்டில் வசித்து வருகிறார்.உமாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு, தனது திருமணத்திற்காக பணம், நகை சோ்த்து வந்தாா்.

இந்நிலையில் உமா நேற்று காலை சென்னை அண்ணாநகரில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினாா். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு உள்ளே சென்று பார்த்த போது, உமா திருமணத்திற்காக பீரோவில் வைக்கபட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள் மற்றும் 20,000 ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அதோடு திருடர்கள் பிரபலமான ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணி உள்ளிட்ட உணவை, வீட்டிற்குள் அமா்ந்து சவகாசமாக சாப்பிட்டு விட்டு அந்த கவா்களையும் வீட்டினுள் போட்டிருந்தனா். சாப்பிட்டு முடித்து ஓய்வு எடுத்த பின்பு சாவகாசமாக திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து இன்று பீர்கன்காரனை போலீசாருக்கு புகார் அளிக்கபட்டதை அடுத்து கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார் தடையங்களை சேகரித்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வீட்டில் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.15,000 பணத்தை திருடா்கள் திருடி சென்றுள்ளனா். அதில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. எனவே அதே திருடா்கள் தான் தற்போது மீண்டும் கைவரிசையை காட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!