தாம்பரத்தில் ரத்ததான முகாம் துவக்கிவைத்த மாநகர கூடுதல் போலீஸ் கமிஷ்னர்

தாம்பரத்தில் ரத்ததான முகாம் துவக்கிவைத்த மாநகர கூடுதல் போலீஸ் கமிஷ்னர்
X

தாம்பரம் ரத்ததான முகாம்.

தாம்பரத்தில் ரத்ததான முகாமை மாநகர போலீஸ் கூடுதல் கமிஷ்னர் தேன் மொழி துவக்கிவைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில், தாம்பரம் மத்திய சுழற்சங்கம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை துவக்கி வைத்த பின்னர் சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையாளர் தேன்மொழி ஐ.பி.எஸ் பேசும்போது:-

கொரோனா என்கிற கொடிய காலத்தை மனித தன்மை காரணமாக தான் கடந்து வருகிறோம், எந்த ஒரு மருத்துவரும், காவல் துறையினரும், லாரி ஓட்டுனர், கடைகாரர், ஆட்டோ ஓட்டுனர் என நிலை அறிந்து பணி செய்தனர், தங்கள் வீட்டிற்கு பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் பணியை நிறுத்திவிட்டு செல்லவில்லை அதனால்தான் கொடிய கொரோனா காலத்தை கடக்கிறோம் என்றார்,

அதுபோல் விபத்துகள் அதிகம் ஏற்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று அதனால் ரத்தம் அதிகம் தேவைப்படுகிறது இதனை கருத்தில் கொண்டுதான் இளைஞர்கள் ரத்தம் தானம் கொடுக்கிறார்கள்,

இதுபோன்ற சுழற்சங்கமமும் அவர்களின் தன்னார்வ செயல்பாடுகளால் தேவை பூர்தியாகிறது என்றார். அப்போது ரத்தம் தானத்தில் ஈடுபட்டவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கப்பட்டது.

இந்த ரத்ததான முகாமில் சுழற்சங்க மாவட்ட அளுனர் பி.சி.பழனி, தாம்பரம் மத்திய சுழற்சங்க தலைவர் வெற்றிவேல்ராஜன், செயலாளர் மருத்துவர் வனித்தா, மற்றும் சுழற்சங்க உறுப்பினர் நந்தகுமார் உள்ளிடோர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business