ஆலந்தூர் மண்டலத்தில் மண கோலத்தில் பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
ஆலந்தூர் மண்டலம் 162,வது வார்டில் போட்டியிட பாஜக வேட்பாளர் வினோத்குமார் மணக்கோலத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து, இன்று வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி என்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டுகின்றனர் .
இந்த நிலையில் பாஜக சார்பாக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துவரும் நிலையில் சென்னை மாநகராட்சி தேர்தலில் ஆலந்தூர் மண்டலம் 162,வது வார்டில் போட்டியிடுவதற்கு வினோத் குமார், பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டார்.
வினோத் குமாருக்கு இன்று காலை திருவாலங்காடு கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. அங்கிருந்து மணமகள் ராஜேஸ்வரியுடன் மணக்கோலத்தில் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் இதில் வெற்றி பெறுவேன் என்றும், எனக்கு சிறப்பான நாள் என்பதனால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தேன் என அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu