இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலி: ஏரியில் இராட்சத பேனர் வைத்த இருவர் கைது

இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலி: ஏரியில் இராட்சத பேனர் வைத்த இருவர் கைது
X

பல்லாவரம் ஏரியில் வைக்கப்பட்டிருந்த பேனர்.

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலியாக, பல்லாவரம் ஏரியில் இராட்சத விளம்பர பேனர் வைத்ததாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், பல்லாவரம் ஏரியில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக, குரோம்பேட்டையை சேர்ந்த விஜய்(33), அமைந்தகரையை சேர்ந்த ஷோபன்பாபு(42), ஆகிய இருவரை கைது செய்து அவர்கள் மீது பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ரேடியல் சாலையில் இராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டு, அது கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த செய்தி, நமது இன்ஸ்டாநீயூஸ் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து, செய்தி எதிரொலியாக வழக்குப்பதிவு செய்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மருத்துவ மைதானத்தில் மிளிரும் கார்டியாக் கான்கிளேவ் மாநாடு..!