ஹிஜாப்பிற்கு தடை : மாணவர் அமைப்பு முற்றுகை - சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஹிஜாப்பிற்கு தடை : மாணவர் அமைப்பு முற்றுகை - சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
X

தாம்பரத்தில் மாணவர் அமைப்பு  தபால் நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் திடீரென சாலையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிஜாப்பிற்கு தடை விதித்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாம்பரத்தில் மாணவர் அமைப்பு பேரணியாக சென்று தபால் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டபோது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

முஸ்லிம் பெண்கள் கல்வி நிலையத்தில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து சமூக நீதி மாணவர் இயக்கத்தினர் நூற்றுகணக்கானோர் பேரணியாக தபால் நிலையம் நோக்கி வந்தனர். அப்போது தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் திடீரென சாலையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் சமரசம் செய்து அவர்களை அங்கிருந்து கலைத்தனர். பின்னர் மாணவ, மாணவியர் ஹிஜாப் தடைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....