மாடம்பாக்கத்தில் அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்: தமிழ் மகன் உசேன் ஆய்வு

மாடம்பாக்கத்தில் அ.தி.மு.க.  அமைப்பு தேர்தல்: தமிழ் மகன் உசேன் ஆய்வு
X

அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் தொண்டர்கள் மனு அளித்தனர்.

மாடம்பாக்கத்தில் அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடைபெறுவதை அவை தலைவர் தமிழ்மகன் உசேன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது. நகர, பேரூர் ஆகிய இடங்களில் அ.தி.மு.க.வில் 9 பணியிடங்களுக்கான கழக அமைப்பு தேர்தலுக்கு நிர்வாகிகள் விருப்பு மனு அளித்து வருகிறார்கள்.

அதன்படி தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பேரூரில் 15 வார்டுக்கான நிர்வாகிகள் தேர்வுக்கு பலர் விருப்ப மனு அளித்தனர். 8 வது வார்டுக்கு அவை தலைவராக சீனிவாசன், வட்ட செயலாளராக ரகுராமனும் விருப்பமனு தாக்கல் செய்தனர். அதேபோல் 1 வது வார்டிற்கு வட்ட செயலாலராக தேவராஜன் விருப்ப மனு தாக்கல் செய்தார். மாடம்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் போட்டியின்றி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என மாடம்பாக்கம் பேரூர் கழக செயலாளர் தேவேந்திரன் தெரிவித்தார்.

அதேபோல தாம்பரம் நகரத்திலும் 39 வார்டுக்கு கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது. தாம்பரம் மற்றும் மாடம்பாக்கத்தில் கழக அவைதலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விருப்பமனு அளித்தவர்களிடம் விருப்பமனுக்களை பெற்றார். உடன் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் சின்னையா ஆகியோர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
why is ai important in business