குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் அண்ணா பிறந்த நாள் விழா அதிமுக கொண்டாட்டம்

குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் அண்ணா பிறந்த நாள் விழா அதிமுக கொண்டாட்டம்
X

குரோம்பேட்டையில் அதிமுக சார்பில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் அண்ணா பிறந்த நாளையொட்டி அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அண்ணாவின் 113வது பிறந்தநாளையொட்டி செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில் அதிமுக சார்பில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதே போல் அதிமுகவினர் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு அதிமுக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் பல்லாவரம் நகராட்சி முன்னாள் துணை தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர், தாம்பரம் நகராட்சி முன்பு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, மாவட்ட செயலாளர் சிட்டலபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியதை செலுத்தினர். இதில் தாம்பரம் நகர செயலாளர் கூத்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!