தீபாவளியை முன்னிட்டு பட்டாசு, இனிப்புகள் வழங்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்

தீபாவளியை முன்னிட்டு பட்டாசு, இனிப்புகள்  வழங்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்
X

அதிமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கிய காட்டாங்கொளத்தூர் அதிமுக செயலாளர்

தீபாவளியை முன்னிட்டு ரூ,17 லட்சம் செலவில் 2 ஆயிரம் பேருக்கு பட்டாசு, இனிப்புகளை வழங்கிய அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர்

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கட மங்களம் பகுதியில் உள்ள அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா (எ) கஜேந்திரன் தலைமையில், தீபாவாளி பண்டிகையை முன்னிட்டு, 2 ஆயிரம் அதிமுக நிர்வாகிகளுக்கு, ரூ, 17 லட்சம் செலவில் இனிப்புகள், பட்டாசுகள், மற்றும் பரிசுப்பெட்டகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழக செயலாளர் சிட்லப்பாக்கம் இராஜேந்திரன் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, வண்டலூர் திமுக கிளைச் செயலாளர் அருள் தலைமையில், 28 பேரும், பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து கிளைச் செயலாளர் குணசேகர் தலைமையில் 21 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து 18 பேர் என மொத்தம் 75 பேர், செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழக செயலாளர் சிட்லப்பாக்கம் இராஜேந்திரன், மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா (எ) கஜேந்திரன் தலைமையில், அதிமுகவில் இணைந்தனர். அவர்காளுக்கு அதிமுகவினர் சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!