மின் கட்டண உயர்வு கண்டித்து தாம்பரத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வு கண்டித்து தாம்பரத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
X

மின் கட்டண உயர்வு கண்டித்து தாம்பரத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADMK News Tamil - தமிழகத்தில் மின் கட்டண உயர்வு கண்டித்து தாம்பரத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADMK News Tamil -செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சண்முகம் சாலையில் அ.தி.மு.க. சார்பில் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் இராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் சின்னையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணிதா சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது, உயர்த்தாதே, உயர்த்தாதே மின் கட்டணத்தை உயர்த்தாதே ஷாக் அடிக்குது, ஷாக் அடிக்குது, தமிழகத்தை இருளில் மூழ்கடிக்காதே, அடிக்காதே, அடிக்காதே ஏழையில் வயிற்றில் அடிக்காதே, என்னாச்சு என்னாச்சு, தேர்தல் வாக்குறுதி என்னாச்சு, நீட் தேர்வு ரத்து என்னாச்சு, ஏமாற்றாதே, ஏமாற்றாதே மாணவர்களை ஏமாற்றாதே, தாலிக்கு தங்கம் திட்சத்தை நிறுத்தாதே, மடிக்கணினி திட்டத்தை நிறுத்தாதே, போடாதே போடாதே பொய் வழக்கு போடாதே என கோஷங்களை எழுப்பினர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!