தாம்பரம் மாநகராட்சியில் சட்டவிரோதமாக இராட்சத விளம்பர பேனர் வைக்க லஞ்சம்?

தாம்பரம் மாநகராட்சியில் சட்டவிரோதமாக இராட்சத விளம்பர பேனர் வைக்க லஞ்சம்?
X

பல்லாவரம் ரேடியல் சாலை மற்றும் ஜி.எஸ்.டி.சாலை

தாம்பரம் மாநகராட்சியில் சட்டவிரோதமாக இராட்சத விளம்பர பேனர் வைக்க லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எஸ்.டி.சாலை, பல்லாவரம் ரேடியல் சாலை, வேளச்சேரி பிரதான சாலை, தாம்பரம், குரோம்பேட்டை பேருந்து நிலைய நிழற்குடைகள் ஆகிய பகுதிகளில் நீதிமன்ற தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக இராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் முக்கிய சாலை வழியாக பயணம் செய்வோரின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது. அனுமதியின்றி வைத்திருக்கும் பேனர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் சில சமூக விரோதிகளிடம் கைகோர்த்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பது போல் பாவலா காண்பித்துக் கொண்டு சில மாதங்களுக்கு முன்பு விளம்பர பேனர்களை அகற்ற நோட்டீஸ் வழங்கி மூன்று நாட்களில் எடுக்க வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பெயரளவிற்கு நோட்டீஸ் வழங்கி விட்டு, விளம்பர பேனர்கள் வைப்பவர்களிடம் பல லட்சங்களை பணம் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக பேனர் வைத்துக் கொள்ள வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தாம்பரம் பேருந்து நிலைய நிழற்குடை, குரோம்பேட்டை பேருந்து நிலைய நிழற்குடை என அனைத்தையும் ஆக்கிரமித்து அதில் விளம்பரம் வைத்து மாதம் தோறும் பல லட்ச ரூபாய்களை மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சமாக பெறுவதாகவும் கூறப்படுகிறது.

மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உடனடியாக தாம்பரம் மாநகராட்சி எல்லைப்பகுதியில் இருக்கும் அனைத்து விளம்பர பேனர்களையும் அகற்றி அதை வைத்தவர்களை மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் லஞ்சம் வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் செயல்பட்ட தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!