தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு

தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு
X

தாம்பரம் அருகே  பெட்ரோல் குண்டு வீசபட்ட ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீடு.

Petrol Bomb Attack -தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Petrol Bomb Attack -சென்னை தாம்பரம் அடுத்த சிடலப்பாக்கம் ராஜராஜேஸ்வரி தெருவில் வசித்து வருபவர் ஆர்எஸ்எஸ் தாம்பரம் பகுதி மாவட்டத் தலைவர் சீதாராமன்(63). இவர் அதிகாலை வீட்டின் வெளியே பலத்த சத்தம் கேட்டதை அடுத்து சீதாராமன் வெளியே வந்து பார்த்து போது பெட்ரொல் குண்டு வீசப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து சிட்லப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் சீதாராமன் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு கையில் தயாராக வைத்திருந்த பெட்ரோல் நிரப்பட்ட பட்டிலை பற்ற வைத்து வீட்டினுள் வீசி விட்டு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்ததுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிகரனை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு நடைபெற உள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!