குரோம்பேட்டையில் சாலையில் சென்ற இருசக்கர வாகனம் : தீப்பற்றி எரிந்து சேதம்

குரோம்பேட்டையில் சாலையில் சென்ற இருசக்கர வாகனம் : தீப்பற்றி எரிந்து சேதம்
X

குரோம்பேட்டையில் சாலையில் சென்ற டூவீலர் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.

குரோம்பேட்டையில் சாலையில் சென்ற இரு சக்கரவாகனம் தீப்பற்றி எரிந்து சோதமானது.

சென்னை குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி.சாலை, சைதன்யா பள்ளி எதிரில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமானது.

இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிவது குறித்து தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

விசாரணையில் இருசக்கர வாகனம் இராயபேட்டையை சேர்ந்த சித்திக்(22), என்பவருடடையது எனவும், புதுப்பேட்டையில் மட்டன் சிக்கன் கடை நடத்தி வருவதாகவும், குரோம்பேட்டைக்கு புகாரி ஓட்டலுக்கு கறி கொடுக்க வந்த போது விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இருசக்கர வாகனத்தில் இருந்து புகை வந்து நின்றவுடன் சித்திக் இறங்கிவிட்டதால் காயமேதுமின்றி தப்பி விட்டார். சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!