வண்டலூா்-மீஞ்சூா் அவுட்டா் ரிங்ரோட்டில் நடந்த விபத்தில் 3 போ் பலி

வண்டலூா்-மீஞ்சூா் அவுட்டா் ரிங்ரோட்டில் நடந்த விபத்தில்  3 போ் பலி
X

விபத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

வண்டலூா்-மீஞ்சூா் அவுட்டா் ரிங்ரோட்டில் நின்றிருந்த லாரியின் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் 3 போ் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட வண்டலூா்-மீஞ்சூா் வெளி வட்ட சாலையில் மண்ணிவாக்கம் புதுநகா் அருகே சாலையோரம் லாரி ஒன்றை நிறுத்தி விட்டு,டிரைவா் அருகே உள்ள டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்தாா்.

அப்போது வண்டலூரிலிருந்து வேகமாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்று,நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியது.அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த 30 வயது ஆண்,14 வயதுடைய சிறுவன்,7 வயதுடைய சிறுமி ஆகிய 3 பேரும் தலையில் அடிப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தனா். உடனடியாக வண்டலூா் ஓட்டேரி போலீசாா் 3 உடல்களையும் கைப்பற்றி,குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அதோடு லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரும் ஒரே குடும்பத்தை சோ்ந்தவா்கள்.

சென்னை குரோம்பேட்டை அருகே நாகல்கேணி காந்திநகரை சோ்தவா் கோபி (37).அவருடைய மகன் சபரி (9), மகள் மோனிகா (7). கோபி நாகல்கேணியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றினாா்.நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் குழந்தைகளை அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் கோவளம் சென்றிருந்தாா்.நேற்று இரவு வீட்டிற்கு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!