செங்கல்பட்டில் முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு: 259 மாணவர்கள் எழுதினர்

செங்கல்பட்டில் முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு: 259 மாணவர்கள் எழுதினர்
X
முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு ( பைல் படம்)
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதுகலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வை 259 மாணவ, மாணவிகள் எழுதினர்.

முதுகலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 259 பேர் இந்த தேர்வினை எழுதினர்.

இதற்காக சிறுசேரி முகம்மது சதக் கல்லூரியில் 200 மாணவர்களும், மேலக்கோட்டையூர் வி.ஐ.டி கல்லூரியில் 59 மாணவர்களும் தேர்வு எழுத மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு அறையிலும் 12 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

முன்னதாக தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் காலை 11 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த மாணவர்கள் தனி அறைகளில் அமர வைக்கப்பட்டு தேர்வு எழுதினர். முக கவசம் கட்டாயம் என்பதால் அனைத்து மாணவர்களுமே முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தே தேர்வினை எழுதினர்.

மேலும் தேர்வு எழுத வந்த மாணவிகள் ஜிமிக்கி, கம்மல் போன்றவை அணியவில்லை. நீட்தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு 2 மையங்களிலும் தலா 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture