சேலையூரில் வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: 2 பேர் கைது

சேலையூரில் வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: 2 பேர் கைது
X

சேலையூரில் வீடு புகுந்து கொள்ளையடித்த கொள்ளையன்.

சேலையூரில் வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த ஒரு பெண்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கிழக்கு தாம்பரம், சேலையூர் அடுத்த அகரம் தென், குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர், ரவி(43), கார்பெண்டர் வேலை பார்த்து வருகிறார். இவரது, மனைவி சுகுணா(37), தம்பதிகளுக்கு, புஷ்பலதா(19), என்ற மகள் உள்ளார்.
கடந்த மாதம் 23,ம் தேதி, ரவி வேலைக்கு சென்றார். சுகுணா, மேடவாக்கத்திற்கு துணி எடுக்கச் சென்றார்.புஷ்பலதா மட்டும், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத, பெண் மற்றும் ஆண் ஆகியோர், வீட்டிற்கு வந்துள்ளனர்.
அவர்கள், ரவியின் உறவினர்கள் எனவும், திருமணத்திற்கு பத்திரிகை வைக்க வேண்டும் எனக்கூறி, வீட்டில் இருந்து, தாம்பூல தட்டு ஒன்றை, எடுத்து வருமாறு கூறியுள்ளனர்.
புஷ்பலதா தாம்பூலதட்டை எடுக்க சென்றபோது, மர்மநபர்கள் இருவரும், அவரை, பின்தொடர்ந்து சென்று, சமையலறையில் வைத்து, கத்தியை காட்டி மிரட்டி கை, கால்களை கட்டி, வாயை துணியால் வைத்து மூடி, படுக்கை அறையில் உள்ள, கட்டில் மேல் தூக்கி போட்டுள்ளனர்.
பின், புஷ்பலதா சத்தம் போடாமல் இருக்க, வீட்டில் இருந்த, டி.வி.,யின் ஒலியை, மிக அதிகமாக வைத்து, பீரோவில் இருந்த, 7 சவரன் தங்க நகைகள், 1.30 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை, கொள்ளையடித்து தப்பினர்.
இது குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் பணம், நகைகள் இருப்பதை, ரவி யாரிடமாவது தெரிவித்தாரா என, விசாரித்தனர்.
அதில், அவர், தன் மனைவியின் அக்கா மகளான, வேங்கைவாசல், சீதாலட்சுமி நகரில் வசிக்கும், சுமதி(30), என்பவரிடம், 'தான் பணம் மற்றும் நகைகள் சேமித்து வைத்து இருப்பதாகவும், தனக்கும், தன் தம்பிக்கும் வீடு வாங்க வேண்டும்' எனக் கூறியதாக, போலீசாரிடம் தெரிவித்தார்.
அதன்படி, சுமதி மற்றும் அவரது, கணவர் ராகவேந்திரன்(34), ஆகியோரை பிடித்து வந்து விசாரித்ததில், இருவரும் நகை, பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டனர்.
பர்தா, அணிந்து வந்ததால் அப்போது புஷ்பலதாவால் அடையாளம் காணமுடியவில்லை. ராகவேந்திரன் சுமதிக்கு இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 5 சவரன் நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்