பெற்றோர் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

பெற்றோர் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

பெருங்களத்தூரில் பெற்றோர் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் ஆர்.எம்.கே நகரை சேர்ந்தவர் விஜயன் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கோமதி (33) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகள் மாலினி (16) சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பதினொராம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று, மாலினி சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது அறைக்கு சென்றவர் இன்று காலை வரை கதவை திறக்காத்தால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மாலினி கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து பீர்க்கன்காரனை போலிசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்