செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை  1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா  தடுப்பூசி
X

பைல் படம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் பேட்டி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் ரோட்டரி கிளப் தாம்பரம் சென்ரல் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக பணிவாந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 30 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் மானுவேல் ராஜ், நாளை தமிழகம் முழுவதும் மெகா தடுப்புசி முகாம் நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் நாளை ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்த முகாமினை தடுப்பூசி இதுவரை செலுத்தாவர்கள் பயன்படுத்தி கொண்டு நாளை தடுப்பு செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தாம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் 36 முகாமிற்கு 150 தன்னாவர்களை வழங்குகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story