தாய் திட்டியதால் விரக்தி !- மகன் தற்கொலை

தாய் திட்டியதால் விரக்தி !- மகன் தற்கொலை
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிபோதைக்கு அடிமையானவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கம், எழில்நகர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, எட்டடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்தவர் பிரகாஷ் (25). டிரைவராக வேலை செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் தந்தை இறந்து விட்டார். தற்போது தாய் ராஜகுமாரி உடன் வசித்து வருகிறார். பிரகாஷ் குடி போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை பிரகாஷ் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாகவும் இதனை தாய் ராஜகுமாரி கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பிரகாஷ் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்த தகவலின் பேரில் பெரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!