கள்ளநோட்டை கொடுத்து பெட்ரோல் போட்டவர் கைது

கள்ளநோட்டை கொடுத்து பெட்ரோல் போட்டவர் கைது
X

பெட்ரோல் பங்கில் 500 ரூபாய் கள்ளநோட்டை கொடுத்து பெட்ரோல் போட்டவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து பெட்ரோல் போட்டுள்ளார். அதை வாங்கிய ஊழியர் அது கள்ளநோட்டு போன்று இருந்தால் இது குறித்து நிர்வாகத்திடம் கூறியுள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்ததும் பெரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தலைமையில் சென்ற போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன் (34) என்பதும் இவருக்கு இந்த கள்ளநோட்டை கொடுத்தது அவரது அண்ணன் ஜெகதீஸ்வரன் (38) என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து ஜெகதீஸ்வரனிடம் நடத்திய விசாரணையில் அவரது வீட்டில் வைத்திருந்த ரூ 25 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இருவரையும் கைது செய்த பெரும்பாக்கம் போலீசார் இவர்களுக்கு எப்படி 25 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது தாம்பரத்தை சேர்ந்த தெரிந்த நபர் ஒருவர் தன்னிடம் பணம் கொடுத்ததாக கூறியதை தொடர்ந்து அவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!