இலங்கையைச் சேர்ந்த ஐந்து பேர் கைது
இலங்கை நிழல் உலக தாதா அழாகாப்பெரும்மக சுனில் ஜெமினி பொன்சேகாவின் கூட்டாளிகள் இரண்டு பேர் உட்பட 5 நபர்களை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கை நாட்டின் நிழல் உலக தாதாவாக செயல்பட்டு வந்த அழாகாப்பெரும்மக சுனில் ஜெமினி பொன்சேகா கடந்த அக்டோபர் 13 ம் தேதி காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரது கூட்டாளிகளும் இலங்கை தாதாக்களுமான பூமா கென்னடி பெர்ணாண்டஸ், குணசேகரன் உட்பட பிரபாகரன், விக்னேஸ்வரன், திலீபன் ஆகிய 5 நபர்கள் இதுநாள் வரையில் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சென்னை விமான நிலைய நிலையத்திலிருந்து டெல்லிக்கு அந்த ஐந்து பேரும் செல்லவிருந்தனர். அப்போது சந்தேகத்கிற்கு இடமான வகையில் இருந்த ஐந்து பேரிடமும் விமான நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த ஐந்துபேரும் விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதனை அடுத்து காஞ்சிபுரம் கியு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் போலீசார் விரைந்து அந்த ஐந்து பேரையும் கைது செய்தனர்.
இதில் பூமா நின்ற குற்றவாளி 2008 இல் விடுதலைப்புலி இயக்கத்தில் இலங்கையில் ஒரு மாவட்டத்தின் கடற்படை தளபதியாக இருந்துள்ளார் அதேபோல் குணசேகரன் என்பவர் விடுதலை புலி இயக்கத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார். கைது செய்யப்பட்ட 5 நபர்களையும் செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி காயத்திரிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஐந்துபேரையும் கொரொனா பரிசோதனை முடியும்வரை ஒருவாரம் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் தனிமைப்படுத்தப்பட்டு பிறகு புழல் சிறை சாலைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu