சிலிண்டர் வெடித்து விபத்து - 10 வீடுகள் நாசம்

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரில் மின்கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்ததில் அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் சாந்தி நகரில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட குடிசைகளில் பலர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள முனியப்பன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து சிதறி அருகில் இருந்த 10க்கும் மேற்பட்ட குடிசைகளில் தீ வேகமாக பரவியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. மேலும் மின்சார கம்பிகள் எரிந்ததால் மின்சாரம் துண்டிக்கபட்டது .வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடைமைகள்,மின்சாதன பொருட்கள், பணம் ஆகியவை தீயில் கருகின. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சங்கர்நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!