செங்கல்பட்டு மாவட்டத்தில் மீன் வளர்ப்புக்கு மானியம்: ஆட்சியர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மீன் வளர்ப்புக்கு மானியம்: ஆட்சியர் தகவல்
X

செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத்

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் மூலம் மீன் வளர்ப்புக்கு மானியம் வழங்கப்படும் என்று செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, காஞ்சீபுரம் (இருப்பு) நீலாங்கரை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற மீனவ பயனாளி, மீனவ விவசாயிகள் புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தினில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.


புதிய மீன்வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தின்கீழ் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மானியம் மற்றும் ஆதிதிராவிட /மகளிருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.

நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மீன்வளர்க்க உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.

சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் மீன்வளர்த்திட ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.

நன்னீர் மீன்வளர்ப்பிற்கான நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கான ரூ.14.லட்சம் செலவினத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.


ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்பு அலகு (நன்னீர் மீன்களை இனப்பெருக்கம் மற்றும் வளர்த்தல்) ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தினில் ஒரு அலகிற்கு பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.

கொல்லைப்புற அலங்கார மீன்வளர்ப்பு அலகு ரூ.3.லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.

மீன்விற்பனை அங்காடி (அலங்கார மீன்வளர்ப்பு/மீன் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளடங்கியது) ரூ.10.லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தினில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் ஆதிதிராவிடர். மகளிர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.

குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.20.லட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தில் ஒரு அலகுக்கு பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.

குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய மூன்று சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினில் ரூ.3.லட்சம் மதிப்பீட்டில் ஒரு அலகிற்கு பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது

குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் ரூ.73,721 மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தில் ஒரு அலகுக்கு பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.

பயோபிளாக் குளங்களில் உவர்நீர் இறால் வளர்த்தல் திட்டத்தில் ஒரு அலகுக்கான ரூ.18.லட்சம் செலவினத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் மகளிர், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.


கடற்பாசி வளர்த்தல். கடல் ஆளி வளர்த்தல் திட்டத்தில் ஒரு அலகுக்கான செலவினத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் மகளிர், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.

கூண்டுகளில் கடல் மீன்கள் வளர்க்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கான ரூ.5.லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் மகளிர், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.

பாரம்பரிய மீனவர்களுக்கு படகு வலை எஞ்சின் மற்றும் குளிர்காப்பு பெட்டி வழங்குதல் திட்டத்தினில் ஒரு அலகுக்கான ரூ.5.லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் மகளிர் பிரிவினருக்கு 60 சதவீதம் மானியம் வழங்கப்படவுள்ளது.

பனிகட்டி உற்பத்தி நிலையம் அமைத்தல் (10 டன்) திட்டத்தினில் ஒரு அலகிற்கான ரூ.40 லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் மகளிர், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.

பனிகட்டி உற்பத்தி நிலையம் அமைத்தல் (20 டன்) திட்டத்தினில் ஒரு அலகிற்கான ரூ.80.லட்சம் செலவினத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் மகளிர், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது.

ரூ.25.லட்சம் மதிப்பீட்டில் நோய் கண்டறிதல் மற்றும் தர பரிசோதனை ஆய்வகங்கள் நிறுவிட ஒரு அலகிற்கு பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியம் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளது

எனவே, இத்திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் "காஞ்சீபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்1/269, கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, சென்னை 600 115 என்ற முகவரியிலும் 99762 29961 அலைபேசி எண்ணிலும்தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!