செம்மஞ்சேரியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் தலைமையில் மண்டல ஆய்வு கூட்டம்
செம்மஞ்சேரியில் நடந்த மண்டல அளவலான ஆய்வு கூட்டம் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி தனியார் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ், திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி. பொன்னேரி துரை சந்திரசேகர், மாதவரம் சுதர்சனம் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டு பள்ளி கல்வித்துறையில் மாணவர்களின் நலன் குறித்தும், மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களில் தஞ்சை, நெல்லை, கோவை, வேலூர் ஆகிய மண்டலங்களில் ஆய்வுக் கூட்டம் முடிவடைந்த நிலையில் சென்னை மண்டலத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும், தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியரை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்த அறிவுறுத்தினார். மாணவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உடற்கல்வி நேரத்தை தவிர்க்காமல் விளையாட வைக்கப்படுகிறார்களா என கண்காணிக்க வேண்டும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாகும் வகையில் ஊக்குவிக்கும் பேச்சாளர்களை பேச வைக்க வேண்டும், சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள பள்ளிகள் மாநகராட்சியோடு இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பள்ளி கட்டமைப்பை சீரமைக்க 400 கோடி ஒதுக்கி மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளி மாணவர்கள் தான் அதிக அளவில் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள். அதிக அழுத்தம் கொடுத்து அதிக மதிப்பெண் பெற வைத்து, பள்ளியை பேனர் வைத்து விளம்பர படுத்துவதாக கூறினார். பள்ளி மாணவர்களிடம் திடீரென சென்று பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் சென்று பேசுங்கள் அதை வைத்து கலந்தாலோசிக்க அறிவுறுத்தினார். மாணவர்களின் விவரங்களை முழுமையாக சேகரிக்க வலியுறுத்தினார். அதிக ஆய்வுகளை பள்ளிகளில் மேற்கொள்ளுங்கள் என பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu