சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் வம்பு செய்த இளைஞர் கைது

சாலையில் நடந்து சென்ற  பெண்களிடம் வம்பு செய்த  இளைஞர் கைது
X
தாய் திருமணம் வைக்காத ஏக்கத்தில் ஆசையாய் தட்டியதாக வாலிபர் வாக்குமூலம்

நடந்து செல்லும் பெண்களின் பின்புறத்தை பதம் பார்த்த இளைஞர் கைது. தாய் திருமணம் வைக்காத ஏக்கத்தில் ஆசையாய் தட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தில் நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக அருகில் வந்து பின்புறத்தை தட்டிவிட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.இந்நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடம் சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இளைஞரின் இருசக்கர வாகன பதிவெண்ணை கண்டுபிடித்தனர்.அதன் மூலம் அந்த நபரின் முகவரிக்கு சென்ற போலீசார் மூவரசம்பேட்டை, 11வது மெயின் ரோட்டில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அவர் பெயர் அஜித்குமார்(22), என்பதும், பெயிண்டர் வேலை செய்து வருவதும் தெரியவந்தது, வீட்டில் தாயிடம் திருமணம் செய்து வைக்க கோரி கேட்டும், திருமணம் செய்து வைக்காததால் ஏக்கத்தில் நடந்து செல்லும் பெண்களை ஆசையாய் பின்புறத்தில் தட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் மீது பழவந்தாங்கல், வேளச்சேரி ஆகிய காவல் நிலையங்களிலும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai solutions for small business