நபிகள் நாயகம் பயன்படுத்திய, கம்பளி துணி, ஒற்றைத் திருமுடி பொதுமக்கள் பார்வைிட்டனர்
நபிகள் நாயகம் பயன்படுத்திய கம்பளி துணி பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் அனைத்து சமய மத நல்லிணக்க மீலாது நபி பெருவிழா செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் தர்காவில் நடைபெற்றது.
ஜமாத்தின் மாநில துணை தலைவர், ஜோனவர் குப்பம் முஹல்லா, தலைவர் எஸ்.எம்.சிக்கந்தர் சாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் சையது திலாவர் அலி மற்றும் அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளர் முஹம்மத் அசன் காதிரி, செங்கை மாவட்ட தலைவர் அசேன் பாஷா, செயலர் ஜாக்கீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மேலும் கோலம் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா தங்கம், கார்மேல் அன்னை திருத்தலம் பங்குத்தந்தை அமல்ராஜ், உள்ளிட்ட இந்து, கிறிஸ்தவம் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சமூக தலைவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். நிகழ்ச்சியில் பேசிய சிக்கந்தர் சாஹிப் இந்து முஸ்லீம் கிறித்துவர் என அவரவர் மதத்தில் வேறு பட்டு இருந்தாலும் மனிதம் என்பதில் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்றனர்.
இதில் 1500 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த நபிகள் நாயகம் பயன்படுத்திய பொருட்கள் ஆண்டுக்கு ஒரு முறை தர்காக்களில் காட்சிப்படுத்துவது வழக்கம். அதே போல் கோவளம் பகுதியில் உள்ள தர்காவில் முதல் முறையாக நபிகள் நாயகம் பயன்படுத்திய பொருட்களான உடலில் தவழ்ந்த கம்பளி துணியின் ஒரு பகுதி,
மீலாது மா நாட்டின் கண்மணி நாயகத்தின் ஒற்றைத் திருமுடி, வலிமார்களின் தலைவர் பகுதாதின் அரசர் சையதினா ஷேக் அப்துல் காதிர் ஜீலானி அல் ஹசைனில் ஹீசைனி (ரலி) அவர்களின் ஒற்றைத் திருமுடி, மற்றும் சில வலிமார்கள் உபயோகித்த பொருட்கள் இவை அனைத்தும் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
சென்னை பல்லாவரம் தர்காவில் நபிகள் நாயகம் பயன்படுத்திய அனைத்துப் பொருட்களும் மண்ணடியில் மூடி சீல் வைத்து பாதுகாத்து வருகின்றனர் இன்று கோவளம் தர்காவில் போலீஸ் பாதுகாப்புடன் நபிகள் நாயகம் பயன்படுத்திய கம்பளி துணி மற்றும் ஒற்றை திருமுடியை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தியது அனைவரையும் மகிழ வைத்தது. தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் கூறுகையில்,
இது உலகம் முழுவதும் காட்சி பொருளாக வைத்து வணங்குவது வழக்கம், நபிகள் நாயகம் பயன்படுத்திய பொருட்களை காட்சி படுத்துவது மிக பெரிய பொக்கிஷமாக கருதுகிறோம் என்றனர், மேலும் அப்பொருட்களை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நபிகள் நாயகம் போன்று வாழ்க்கையில் இறக்க குணத்துடன், மற்றவர்களுக்கு கொடுத்து வாழ வேண்டும் என்ற உணர்வு இருக்கும் இதைப் பார்வையிட திரளான மக்கள் திரண்டு வந்து வழிபாடு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu