பெரும்பாக்கத்தில் கணவரை உயிரோடு புதைத்த மனைவி : மகள் போலீசில் புகார்

X
பெரும்பாக்கம் காவல் நிலையம் பைல் படம்
By - S.Kumar, Reporter |20 Nov 2021 8:45 AM IST
பெரும்பாக்கத்தில் கணவரை உயிரோடு மனைவி புதைத்துவிட்டார். மகள் தந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார் செய்தார்.
கணவர் ஜீவசமாதி உயிரோடு புதைத்த மனைவி, சந்தேகம் எழுப்பிய மகள் போலீசார் மனைவியிடம் விசாரணை.
சென்னை பெரும்பாக்கம், கலைஞர் நகர், 8வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ்(60), இவரது மனைவி லட்சுமி(45), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள், மகன் துபாயில் வேலை பார்க்கிறார். மகள் தமிழரசி(25), சோழிங்கநல்லூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நாகராஜ் குறி சொல்லி சாமி ஆடுபவர் இவருக்கு கடந்த 17ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனது மனைவியிடம் தான் சாக போவதாகவும், தன்னை கொல்லை புறத்தில் உள்ள குழியில் ஜீவ சமாதியாக புதைத்து விடுமாறு கூறி கொல்லை புறத்தில் இருந்த குழியில் அமர்ந்து கொண்டு மனவியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டதால், குழிக்குள் மண்ணை போட்டு மூடியுள்ளார்.
வீட்டில் தனது தந்தை இல்லாததால் சந்தேகமடைந்த மகள் தமிழரசி தனது தாயிடம் தந்தை எங்கே என்று கேட்டுள்ளார். பதிலளிக்க தயங்கிய தாய், ஒரு கட்டத்தில் ஜீவசமாதியடைந்ததை கூறியுள்ளார். பின்னர் தமிழரசி இது குறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் பெரும்பாக்கம் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து லட்சுமியிடம் விசாரித்து வருகின்றனர்.
இன்று வருவாய் துறை அதிகாரிகளின் முன்னிலையில் ஜீவ சமாதி அடைந்தவரின் உடலை தோண்டி எடுக்க உள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu