மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி: ஜி.கே.வாசன் வழங்கல்

மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி: ஜி.கே.வாசன் வழங்கல்
X

சாேழிங்கநல்லூரில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வழங்கினார்.

மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லம் மற்றும் அன்னை பாத்திமா குழந்தைகள் நல காப்பகத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான செம்மச்சேரி, சோழிங்கநல்லூர், காரப்பாக்கம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பிரட், போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜி.கே. வாசன் பொதுமக்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இல்லத்தின் தலைவர் ராணிகிருஷ்ணன் செய்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய ஜி.கே வாசன் சென்னையில் பல பகுதிகளில் மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு மழை பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முதற்கட்டமாக அவர்களுக்குத் தேவையான உணவு, தங்கும் இடம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். துரித முறையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மின் மோட்டார்கள் மூலமும் நீரை அகற்றி பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!