அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் விஜய் ரசிகர்கள்

அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் விஜய் ரசிகர்கள்
X

பள்ளிக்கு சமையல் அடுப்பை வழங்கும் நீலங்கரை விஜய் மக்கள் இயகத்தினர்.

நீலாங்கரை கபாலீஷ்வரர் நகர் பகுதி அரசு பள்ளிக்கு விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை கபாலீஷ்வரர் நகர் பகுதியில் நடிகர் விஜய் வசித்து வருகிறார். இதே பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியானது இயங்கி வருகிறது.

இப்பள்ளிக்கு தேவையான சிசிடிவி, கணிப்பொறி, நூலக புத்தகங்கள் என நீலங்கரை விஜய் மக்கள் இயகத்தின் சார்பில் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளிக்கு சமையல் அடுப்பு மற்றும் பள்ளி சுவர்கள் முழுவதும் வண்ணம் தீட்ட சாயங்கள் பள்ளி தலைமை ஆசிரியையிடம் நீலாங்கரை மகளிர் அணி சார்பில் வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்ட பொருப்பாளர் மற்றும் மாவட்ட இளைஞர் அணி தலைவர் இசிஆர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விஜய் மக்கள் மன்ற இயக்கம் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!