துரைப்பாக்கத்தில் கஞ்சா விற்ற வடமாநில இளைஞர்கள் இருவர் கைது

துரைப்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் இருவர் கைது 18 கிலோ கஞ்சா பறிமுதல்.
துரைப்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் இருவரை கைது செய்ய போலீஸார் அவர்களிடமிருந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல்.
சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் பேருந்து நிலையம் அருகே வெள்ளை நிற மூட்டையை வைத்துக் கொண்டு இருவர் சந்தேகப்படும் படி நிற்பதாக துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் மேட்டுக்குப்பம் பேருந்து நிலையம் சென்று இருவரிடம் இருந்த வெள்ளை மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அவர்கள் திரிபுராவை சேர்ந்த ஜசீம் உதின், சைபுல் இஸ்லாம் என்பதும், சென்னையில் கஞ்சா விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என கேள்விப்பட்டு, திரிபுராவில் இருந்து கஞ்சா வாங்கிக் கொண்டு விற்பனை செய்ய சென்னை வந்ததாக தெரிவித்தனர். அவர்களிடமிருந்து 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu