பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் "டிப் டாப்" ஆசாமி: கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்

பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் டிப் டாப் ஆசாமி: கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்
X

கொட்டிவாக்கம் சுப்ரமணிய சாலையிலுள்ள குடியிருப்புகளில் பெண்களின் ஆடைகளை திருடிய டிப்டாப் ஆசாமி சதீஷ்குமார்.

கடந்த ஆறு மாதமாக காயவைக்கும் பெண்களின் ஆடைகளை திருடிய "டிப் டாப்" ஆசாமியை கையும் களவுமாக பிடித்த குடியிருப்புவாசிகள்.

கொட்டிவாக்கம் வீடுகளில் கடந்த ஆறு மாதமாக காயவைக்கும் பெண்களின் ஆடைகளை திருடிய "டிப் டாப்" ஆசாமியை கையும் களவுமாக பிடித்த குடியிருப்புவாசிகள்.

சென்னை கொட்டிவாக்கம் சுப்ரமணிய சாலையிலுள்ள குடியிருப்புகளில் கடந்த ஆறு மாத காலமாக துவைத்து காய வைத்து இருக்கும் பெண்களின் ஆடைகளை மட்டும் திருடு போய் கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் டிப்டாப் உடையில் தலைக்கவசத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்து வீடுகளில் காயப்போட்டு இருக்கும் துணிகளை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இன்று மீண்டும் பெண்களின் ஆடைகளை திருட வந்த போது, அந்த நபரை பொதுமக்கள் கையும் களவுமாக மடக்கி பிடித்து நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர்

விசாரணையில் அந்த நபர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்(39), என்பதும் அவர் நீலாங்கரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் தான் எடுக்கும் பெண்களின் ஆடைகளை தெருவோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து வருவதாக கூறினார். பெண்களின் ஆடையை மட்டும் குறி வைத்து திருடும் டிப்டாப் ஆசாமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!